கீழக்கரை நகரில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் கீழக்கரை நகரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடற்கரை பகுதியில் கழிவு நீர் கலப்பதை பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் கருத்துகளை கேட்டறிந்தார். கீழக்கரை நகர் அனைத்து சமுதாய அமைப்பு நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாதாள சாக்கடை திட்டம், சாலை சீரமைப்பு, கழிவுநீர் தேக்கம், நகருக்குள் பேருந்துகள் வர அனுமதி, பேருந்து நிலையம் சாலை சீரமைப்பு, இ-சேவை மைய சேவை அமைத்தல், நூலகம், கூடுதல் போலீசார் நியமனம், போக்குவரத்து காவலர் நியமனம், அரசு மருத்துவமனையில்  இரவு பணி மருத்துவர் நியமனம், அவசர ஊர்தி ஓட்டுனர் நியமனம் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி, குடிநீர் தொட்டி சீரமைத்தல், வீட்டு இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை உள்பட 21 கோரிக்கைகளை முன் வைத்தனர்.அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு குறைகளை இயன்றளவு நிவர்த்தி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவன் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா துணைத் தலைவர் ஹமீது சுல்தான் நகராட்சி ஆணையர் செல்வராஜ் பொறியாளர் அருள் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்..