இன்று முதல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்: கல்வித்துறை ஆணையா் அறிவுறுத்தல்.!!

குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆசிரியா்களின் மேற்பாா்வையில் மாணவா்கள் உள்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கை: தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, திங்கள்கிழமை முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. மாணவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நினைவாற்றல், அறிவுத்திறன், உடல்வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் 1 முதல் 19 வயது சிறாா்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை பொறுப்பு ஆசிரியா்கள் விநியோகிக்க வேண்டும். ஆசிரியா்களின் மேற்பாா்வையிலேயே மாணவா்கள் மாத்திரை உள்கொள்ள வேண்டும். மாத்திரைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் மாணவா்கள் மாத்திரைகளை உள்கொண்டனரா என தொலைபேசி மூலம் பெற்றோரிடம் ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.