நாளை 10TH ரிசல்ட்

. நாளை மே 20ம் தேதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்டன. ஏப்ரல் இறுதியில் விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், நாளைமே 20ம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி அன்று 4 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். தொடக்கப் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3-ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதால், ஜூன் 1 முதல் 3 வரை ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதே இதற்குத் தற்காலிகக் காரணமாகும். தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.