போதை மாத்திரை விற்பனை செய்வதில் கோவை கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு: 4 பேருக்கு கத்திக்குத்து..!

கோவை : தூத்துக்குடி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு அவரது மகன் சஞ்சய் (வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். போத்தனூரில் அறை எடுத்து தங்கி உள்ளார். கல்லூரிக்கு 15 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மசக்காளி பாளையத்தில் உள்ள தனது நண்பர் கிரினி வாசன் என்பவர் அறைக்கு வந்தார். பின்னர் ஊர் செல்வதற்காக திட்டமிட்டு இருந்தார் .இதற்காக மசக் காளிபாளையம் ஆண்டாள் நகர் பகுதியில் நண்பர்கள் குகன், கிரினிவாசன் ஆகியோருடன் நின்று பேசி கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் மாணவர் சஞ்சய், அவரது நண்பர்கள் குகன், கிரினிவாசன் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் குத்தினர் . இதில் சஞ்சய் அவரது நண்பர்கள் குகன் கிரினிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் சஞ்சய் புகார் செய்தார் .போலீசார் அதே கல்லூரி மாணவர்கள் ஹரி சிங் ,பாரத் சூர்யா ரோஹித் ஐவர் ராஜா ராகேஷ் உட்பட சில மாணவர்கள் மீது கொலை முயற்சி கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 7பிரிவின் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இந்த நிலையில்அதே கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வரும் திண்டுக்கல்லை சேர்ந்த ஹரினி ( வயது 21) பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தன்னை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பிரசாத், குகன், ஜெமினி, பீட்டர், எழில், பார்த்திபன், சஞ்சய் ,மதன், விக்கி ‘ஆகியோர் தாக்கியதாக கூறியுள்ளார்.இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போதை மாத்திரை விற்பனை தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.