கோவை குறிச்சி பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்ற சாரதா ( வயது 40) இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ் செல்லும் வழித்தடத்தில் நேற்று இரவு பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.