கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் சமையல் எண்ணை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பெண் ஒருவர் வந்தார்.
அவர் அந்த கடையில் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்து 1 லிட்டர் எண்ணை வாங்கினார். கடையில் இருந்த பெண் வியாபாரி எண்ணைக்குறியான பணத்தை எடுத்து மீதி பணத்தை கொடுத்தார்.
பின்னர் அந்த பெண் மீண்டும் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து அதற்கு சில்லறை கேட்டார். அதற்கு பெண் வியாபாரி அந்த 2 ஆயிரத்திற்கும் நான்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அந்த நோட்டுக்களை நொடிப்பொழுதில் பின்புறமாக மறைத்து கொண்டார். பின்னர் எண்ணை வாங்கி வியாபாரி தந்த மீதி பணம் குறைவாக உள்ளதாக அவரிடம் காண்பித்து அவரை குழப்பினார்.
சிறிது நேரத்தில் எண்ணை வேண்டாம் என்று திருப்பி கொடுத்தார். அதற்கு கொடுத்த ரூ.2 ஆயிரத்தையும், சில்லரைக்காக கொடுத்த ரூ.2 ஆயிரத்தையும் கடைகாரரிடம் பெற்றார். கடைகார பெண்ணும் முதலில் சில்லரைக்காக கொடுத்த ரூ. 2 ஆயிரத்தை மறந்தார். இதனை பயன்படுத்தி கொண்டு அந்த பெண் அங்கிருந்து பணத்துடன் தப்பி சென்றார்.
இந்த காட்சிகள் அந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Leave a Reply