வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்: மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் – சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்: மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் – சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கோவை, பேரூர் உட்கோட்டம் ஆலாந்துறை காவல் நிலைய சரகம் பூண்டி வெள்ளிங்கிரியில் 3 வது மலை வாய்த்தோலை என்ற இடத்தின் அருகே அதிகாலை 03.00 மணிக்கு

பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ். இவர் திருமணம் ஆகவில்லை. இவரது அண்ணன் செல்வநாதன், தங்கை தமிழ்செல்வி குடும்பத்தாருடன் பாண்டிச்சேரி மாநிலத்தில் பூர்வீகமாக வசித்துக் கொண்டு உள்ளார். மேலும் Pest Control India என்ற தனியார் நிறுவனத்தில் டிவிஷனல் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவர் மலை ஏறுவதில் ஈடுபாடுடையவர்.

இந்நிலையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற தனியாக இரவு வந்து 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து கீழ் இறங்க மூன்றாவது மலை வாய்த்தோலை என்ற இடத்தின் அருகில் வரும்பொழுது அதிகாலை 03.30 மணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்து உள்ளார். மலையேறும் பக்தர்கள் பார்த்து தகவல் கூறியதன் பேரில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சுமை தூக்குபவர்கள் உதவியுடன் பூண்டி கோவில் மலை அடிவாரம் தூக்கி வந்து மருத்துவர்கள் பரிசோதித்ததில் இறந்து உள்ளது தெரியவந்தது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் உறவினர்களுக்கு தகவல் அளித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.