சூலூர் ஒன்றியம், அரசூர் ஊராட்சி, ஊத்துப்பாளையம், குளத்தோட்டம் பகுதியில் விசாலாட்சி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்ட பகுதியில் நேற்று முன்தினம் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக அங்கு வேலை பார்த்த ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வனத்துறையினர் நேற்று அந்த தோட்ட பகுதியில் இருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கேமரா வைத்து கண்காணித்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
சூலூர் அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டமா?







