மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயிலை கவிழ்க்க சதியா…

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் திரிசூலம் ரயில் நிலையத்திற்கு இடையே இன்று காலை 6.20 மணிக்கு மின்சார ரயிலை ஓட்டி வந்த டிரைவர் சற்று தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்த்தார் ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தார் சிறிது நேரத்தில் அந்த விரிசலை சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் ஓடின டிரைவரும் பெருமூச்சு விட்டார் பனிக்காலத்தில் இந்த விரிசல் ஏற்படுவது இயற்கை என கூறப்படுகிறது