கோவை ஒர்க்ஷாப் அதிபருக்கு கொலை மிரட்டல்- 4 திருநங்கைகள் மீது பல வழக்குகள் பதிவு.!!

கோவை சிங்காநல்லூர்,உப்பிலிபாளையம் காமராஜர் ரோட்டை சேர்ந்தவர். சுரேஷ் (வயது 41) இவர் சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்- தனது கடை முன் வந்த திருநங்கைகள் மது , கனிமொழி, நிகிதா, பாப்சி ஆகிய 4 பேரும், தன்னை ஆபாச வார்த்தைகளால் பேசியும், ஆடைகளை அவிழ்த்து காட்டி அசிங்கப்படுத்தியும், கடையில் இருந்த கம்பியை எடுத்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார் . புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 4 திருநங்கைகள் மீதும் கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த 4 திருநங்கைகள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருப்பதால் மேலும் பல வழக்குகள் பதிவு செய்வதற்கு காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.