ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிபிஎம் கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு..!

தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிபிஎம் கட்சியினரை காவல் துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய ஓடிய பெண்களை காவல்துறையினர் துரத்தி சென்றனர். ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விலைவாசி உயர்வுக்கும், வேலை வாய்ப்பின்மைக்கும் மத்திய அரசு காரணம் என குற்றம்சாட்டி. சிபிளம் கட்சியினர் பேரணியாக வந்து தஞ்சை ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். ரயில் நிலைய வாசலில் முள்வேலி இரும்பு தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி மாற்று பாதையில் ரயில் நிலையத்திற்குள் நுழைய பெண்கள் ஓடினார்கள் ,அவர்களை காவல்துறையினர் துரத்தி சென்றனர்.
அதே வேளையில் ஒரு தரப்பினர் வேறு ஒரு வழியாக ரயில் நுழையத்திற்குள் நுழைந்து தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதனால் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிபிஎம் கட்சியினர் மறியல் போராட்டம் காரணமாக சோழன் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே .சாமுவேல்ராஜன், தலைமை வகித்தார். மூத்த தலைவர் என். சீனிவாசன், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி ,செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் சரவணன் ,குருசாமி, மாநகர உறுப்பினர்கள் கரிகாலன், கோஸ் கனி, சி.ராஜன் ,எம். ராஜன், அன்பு, வசந்தி உள்ளிட்ட ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்..