கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய். இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் போத்தனூர் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை காரணமாக கடந்த சில நாட்களாக மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவருடைய நண்பர் கிரி வாசன் என்பவரது அறையில் தங்கி இருந்தார். மேலும் நேற்று தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதற்காக சஞ்சய் திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று காலை சஞ்சய் தனது நண்பர்களுடன் மாசக்காளி பாளையத்தில் உள்ள அறையில் இருந்த போது சில நபர்கள் அங்கு வந்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். மேலும் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி குத்த முயன்றனர். இதில் சஞ்சய், குகன், ஆகியோருக்கு முகத்தில் கத்திக் குத்து பட்டு ரத்தம் வழிந்தோடியது. இவர்களது சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் வந்து குகன், கிரி வாசன்,சஞ்சய் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல அறிந்த சிங்காநல்லூர் போலீசார் ஹரி சிங், பரத், சூர்யா, ரோஹித், யுவராஜா, ராகேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடையாமபாளையம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர் ஹரி சிங் கின் அறையில் சென்று தாக்குதல் நடத்தியதாக பிரசாதந், குகன், ஜெமினி, பீட்டர், பார்த்திபன்,சஞ்சய், மதன் ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.