பைக் சக்கரத்தில் சுடிதார் துப்பட்டா சிக்கி கல்லூரி மாணவி பரிதாப பலி..

கோவை குறிச்சி, திருமலை நகரை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் அப்ரின் பாத்திமா (வயது 25) தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ .இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் பீளமேடு,செங்காளியப்பன் ரோட்டை சேர்ந்த சண்முகம் மகன்சைலேஷ் ( வயது 25) என்பவருக்கும் இடையே சமூக வலைதள மூலம் நட்பு ஏற்பட்டது .இதையடுத்து இவர்கள் இருவரும் நட்புடன்பழகி வந்தனர்.. இந்த நிலையில்அப்ரின் பாத்திமாவுக்கு வேறு ஒருவருடன் அடுத்த மாதம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவருக்கு நேற்று கல்லூரியில் இறுதி ஆண்டு படிப்பு நிறைவு அடைந்தது. இதையடுத்து கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அப்ரின்பாத்திமா நேற்று இரவு 8மணிக்குசைலேசுடன்மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் எல். அண்ட், -டி பைபாஸ் ரோட்டில் உள்ள சிந்தாமணிபுதூர் , ராவூத் தூர் பிரிவு சந்திப்புஅருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அப்ரின்பாத்திமா அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாகாற்றில் பறந்து மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி அப்ரின்பாத்திமா மற்றும் சைலேஷ் இருவரும் கீழே விழுந்தனர் .இதில் அப்ரின் பாத்திமாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சைலேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குபோராடிக் கொண்டிருந்த அப்ரின் பாத்திமாவை. சைலேஷ் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அப்ரின் பாத்திமா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவியின் உறவினர்கள் மற்றும் ஒரு தரப்பினர் கோவை அரசு மருத்துவமனை முன்நேற்று இரவு 10 மணி அளவில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதை யடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர் .இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி சைலேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.