அதிமுக தற்போது ஜாதி கட்சியாக மாறி வருகிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக தற்போது வட்டார கட்சியாக உள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் அது ஜாதி கட்சி ஆக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவை படுகுழியில் தள்ளி விட்டனர் என்றும் எதிர்காலத்தில் அது ஒரு சமூக ஜாதி கட்சியாக மாறும் நிலைமை உள்ளது என்றும் அவர் கூறினார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply