குளுமையாக இருந்த கோவை சூடானது தான் மிச்சம் : ஏப்.10 திமுக, அதிமுகவும் ஒன்று சேரும் – அண்ணாமலை சவால்.!!

கோவை: கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் சூடானது தான் மிச்சம். ஒரு குளுமையாக அமைதியாக இருந்த ஊர் இது.

இன்னைக்கு 2 டிகிரி 3 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது என்று கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறினார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தொகுதி வேட்பாளர்களை அறிவித்த கட்சிகள், தற்போது அவர்களுக்கு வாக்கு சேகரிக்க பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்திருக்கிறார்கள்.. கோவை மாவட்டம் சூடானது தான் மிச்சம். ஒரு குளுமையாக அமைதியாக இருந்த ஊர் இது. இன்னைக்கு 2 டிகிரி 3 டிகிரி வெப்பம் அதிகரித்து இருக்கிறது. ஒரு டூவீலரில் போக முடியுமா?.. மாஸ்க் போடாமல் ஒரு முகத்தில் தூசு படாமல் இங்குள்ள சாலைகளில் போக முடியுமா?.. ஒரு ஆரோக்கியமான சாலைகள் இருக்கிறதா? ஒரு நல்ல பார்க் இருக்கிறதா?

குழந்தைகளோடு நடந்து போக முடியுமா? என்ன செய்திருக்கிறார்கள்.. 10 வருசம் மந்திரியாக இருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தேர்தல் நேரத்தில் செலவு செய்வதற்காக வைத்திருக்கிறார்கள்.. அதிமுகவும், திமுகவும் இப்போது ஒன்றாக சேரவில்லை. ஏப்ரல் 10 ஆம் தேதி திமுகவும் அதிமுகவும் ஒன்றாக சேர்வார்கள். அதிமுக திமுக ஒன்றாக சேர்வதை கடைசி 10 நாளில் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் பங்காளி கட்சியின் சுய உருவத்தை பார்ப்பீர்கள்.

இன்னைக்கு 2 பேரும் தேர்தலில் நிற்பது கம்யூனிஸ்டு கட்சி வேண்டாம். திமுக வரனும் ஏன்? பணபலம், படைபலத்தை வைத்து அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும். திமுகவினருக்கு இங்கே என்ன வேலை. எம்பி தேர்தலில். அதேபோல் அதிமுக காரர்கள் ஏன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு மேல் இரண்டு வேட்பாளர்களில் ஒரு வேட்பாளரை விட்டுக்க்கொடுத்து ஓட்டு மாற்றத்தை செய்ய முயற்சிப்பார்கள். இதனை கேரளாவில் பார்த்திருப்போம்.

பல இடங்களில் பார்த்திருப்போம். இப்போது இந்த கோவையில் தமிழக அரசியலில் முதன் முதலாக இங்கே நடக்கும். இதை எல்லாம் தாண்டி தான் எங்களது வெற்றி இருக்கும். மக்கள் அன்பு எங்களுக்கு இருக்கும் போது பங்காளிகள் என்னவென்னாலும் செய்யட்டும். இங்கு இருக்கக்கூடிய ஒரு எம்பி இத்தனை ஆண்டுகளாக ஒரு கம்யூனிசம். வளர்ச்சி வேண்டாம் என்று பிடிவாதத்தில் இருக்க கூடிய எம்பி. இன்னொரு பக்கம் ஒரு கட்சியுனுடைய வேட்பாளர் கமிஷன் வாங்க மட்டுமே பாலம் கட்டுகிற கட்சி.

ஏன் பாலம் கட்டுகிறார்கள் என்று தெரியாது. பாலத்தில் கீழே பார்த்தீர்கள் என்றால் குண்டும் குழியுமாக இருக்கும். கோவையை நாசம் செய்து வைத்திருக்கிறார்கள். ஊழல் செய்வதற்காக மட்டுமே ஆட்சியில் இருந்த கட்சி இப்போது வளர்ச்சியை பற்றி பேசுகிறார்கள். இங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரியும். கோவை இவர்கள் கொள்ளையடிப்பதற்காக கமிஷன் பெறுவதற்காக வளர்ச்சி என்ற பெயரில் வீக்கத்தை காட்டுகிறார்கள். இது கோவையில் உள்ள எல்லா சாமானிய மக்களுக்கும் தெரியும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.