துபாயில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் கோவை வாலிபரிடம் ரூ.6.50 லட்சம் மோசடி..!

கோவை சேரன் மாநகர் வி.கே. ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 31) இவருக்கு வாட்ஸ் அப் மூலம் துபாயில் வேலை இருப்பதாகவும், நல்ல சம்பளம் வழங்கபடும் என்ற குறுந்தகவல் வந்தது.இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் மூலம் அந்த முகவரி கொண்ட வங்கி கணக்குக்கு ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் அனுப்பினார்.நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாய்ப்புக்கான ஆணை கிடைக்கவில்லை. பிறகு அந்த எண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருஷ்ணமூர்த்தி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.