கோவையில் போலி மது விற்பனையா..? 74 பாட்டில்கள் பறிமுதல் – 2 பேர் கைது..!

கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்த74மது பாட்டில்கள் பறிமுதல் .. 2 பேர் கைது . போலி மதுவா?கோவை மே 23 கோவை சிங்காநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று இருகூர் ,ஏ .ஜி . புதூரில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து.கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ,பில்லு வலசை சேர்ந்த பிரபு ( வயது 35) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதே போல சின்னியம்பாளையம் டாஸ்மாக் கடை (எண் (
18 40) அருகே உள்ள பெட்டி கடையில் மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல குடியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 48) பிரவீன் குமார் (வயது 24) ஆகியோர் கைது செய்யப்பட்டது. 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் போலி மதுவா?டாஸ்மாக்கடையில் வாங்கியதா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.கடந்த வாரம் இதேபோல இருகூரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.