கோவை தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை-மர்ம ஆசாமிகள் கைவரிசை ..!

கோவை சரவணம்பட்டி வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஒய். ஜி. எஸ். நகரை சேர்ந்தவர் மணிமாறன்.(வயது 52) தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலைக்காக சென்னைக்கு சென்று இருந்தார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது அவரது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 9-பவுன் தங்க நகைகள் , ரூ.85 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளயடித்து சென்று விட்டனர். இது குறித்து மணிமாறன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.