மொபட்டில் சென்ற வாலிபர் விபத்தில் பலி..

கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் சுடலைமுத்து .இவரது மகன் கிருஷ்ணகுமார் ( வயது 34) இவர் நேற்று சூலூர் -முத்து கவுண்டன்புதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் இவர் இறந்து கிடப்பதை பார்த்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இவர் ஏதாவது வாகனம் மோதி இறந்தாரா? அல்லது தானாக கீழே விழுந்து இறந்தாரா ? என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..