பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ரயில்வே ஒப்பந்த பணியாளரிடம் ரூ.6 லட்சம் ஆன்லைன் மோசடி.!!

கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் லேஅவுட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மணிகண்டன் ( வயது 29 )இவர் ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28- 8 – 23 அன்று இவரது செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் ஒரு பெரிய நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,அதில் இணைந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .இதையடுத்து அந்த நிறுவனத்தில் சேருவதற்கு முன் பணமாக ரூ.6 லட்சத்து 34 ஆயிரத்து 564 அனுப்புமாறு குறிப்பிடபட்டு இருந்தது . இதை நம்பிய மணிகண்டன் இந்த பணத்தை அனுப்பி வைத்தார். பிறகு எந்த தொடர்பும் இல்லை. வேலைக்கான உத்தரவும் வழங்கப்படவில்லை. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் முடியவில்லை . இது குறித்து மணிகண்டன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..