கோவை கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.!!

கோவை வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கஞ்சா வியாபாரி. இவரை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 13 -1 -20 19 அன்று சி.எம்.சி.காலனிக்கு செல்லும் வழியில் வைத்து கஞ்சா விற்றதாக கைது செய்தனர் .இவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை அத்தியாவசிய பொருட்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்தது. இதைய டுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார்.