பைக் வாங்கி கொடுக்க மறுத்த பெற்றோர்… தூக்கில் தொங்கிய மகன்..

கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள கஞ்சம்பட்டி, நடுக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலிதொழிலாளி. அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 23 )குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது தந்தையிடம் புதிதாக பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அதற்கு அவரது தந்தை மறுத்தார். இதனால் அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஸ்வரன் அவரது வீட்டின் விட்டத்தில் வேட்டியை கட்டி தூக்கில் தொங்கினார். இதை பார்த்த மாரிமுத்து அவரை கீழே இறக்கி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.