கோவையில் 3 இடங்களில் ரவுண்டானா அமைக்க முடிவு- போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தகவல்.!!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்ட பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக திருச்சி ரோடு சிந்தாமணி புதூரில் உள்ள சிக்னல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி பிரிவு சிக்னல்’ மலுமிச்சம்பட்டி சிக்னல், ஆகிய 3 சிக்னல்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அங்கு போலீசார் பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே அங்கு சிக்னல்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது இவர் அவர் கூறினார்.