கோவை இன்ஜினியர் எலி மருந்து தடவிய பிஸ்கட் சாப்பிட்டு உயிரிழப்பு..

கோவை சாய்பாபா காலனியில் உள்ள கே. கே .புதூரை சேர்ந்தவர் விகாஷ் (வயது 32) ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். தூக்கம் வராமல் இருக்க பிஸ்கட் சாப்பிட்டு உள்ளார்.அப்போது தவறுதலாக அவரது வீட்டில் எலிகளை கொல்வதற்காக வைத்திருந்த எலி மருந்து தடவிய பிஸ்கட்டை சாப்பிட்டுவிட்டாராம். இதனால் அவருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..