கோவை மாவட்ட இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்று திடீரென முற்றுகைப் போராட்டத்தில ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தினமும் 600 ரூபாய் கூலி வழங்க வேண்டும். தமிழக அரசே நிறுத்தி வைத்துள்ள திருமண உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போலீஸ் தடையை மீறி சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் ,
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவத்திற்கு பயன்படுத்தும் வழி நிவாரணம் மருந்துகளை போதிக்காக பயன்படுத்தி வருகிறார்கள். மாணவ மாணவிகள் போதைப்பொருள் பொருட்கள் பின்னால் சென்றால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே இது போன்ற குற்ற செயல்களை தடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் காலை ஆறு மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இரவு 10 மணி முதல் நள்ளிரவில் இரண்டு மணி வரையிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தொண்டாமுத்தூர் ஆலந்துறை வேடப்பட்டி பேரூர் செல்வபுரம் குனியமுத்தூர் பகுதிகளில் பார் உரிமையாளர்கள் அத்துமீறி முறைகேடாக மதுபானம் விற்பனை செய்வதாக தெரிகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் அளித்த மனுவில் கோவையில் 11 குளங்களில் மீன் குஞ்சுகளை விட்டு மீன் பிடித்து வருகிறோம். உக்கடம் வாலாங்குளம் பெரியகுளம் போன்றவற்றில் படகுத்துறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டீசல் பயன்படுத்தும்போது படகுகளை பயன்படுத்தினால் மீன்கள் பாதிக்கப்படும். எனவே இதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அளித்த மனுவில் காந்தி பார்க் சி டி டி காலணியில் பழுதடைந்த வீடுகளை குடிசை மாற்று வாரியம் இடித்து வருகிறது. புதிதாக எட்டு மாடி வீடு கட்டும் பணிகள் நடக்கிறது. வீடு ஒதுக்கீடு செய்ய ஒரு லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 30 பேருக்கு ஒதுக்கிட்டு ஆணை இருந்தும் வீடுகள் ஒதுக்க மறுக்கப்படுகிறது. டோக்கன் பெற்ற அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.