கோவை கல்லூரி மாணவனுக்கு பிளேடு வெட்டு – 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!

கோவை அருகே உள்ள சுகுணாபுரம் ,தபால் அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் பிரியன் ( வயது 18) இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஐ. டி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கோவை புதூரில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று  அவர் தங்கி இருந்த அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் இவரது அறைக்குள் புகுந்து பிரியனை தாக்கி பிளேடால் வெட்டினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த 3 பேரும் தப்பி ஓடி விட்டனர் .இது குறித்து பிரியன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஹரி, சக்திவேல்,சஞ்சய், ஆகியோர் மீது கொலை முயற்சிதாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.