மது போதையில் கார் ஓட்டி வந்த கோவை வியாபாரி கைது..!

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நேற்று இரவு ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் . கார் ஓட்டி வந்த இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 32) மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக யுவராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட யுவராஜ் காட்டன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.