கோவை செட்டிபாளையம் போலீசார் நேற்று கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் பாரதிராஜா ( 20 ) என்பது தெரியவந்தது .இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply