கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 12ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் விஷம் குடித்து அழுகிய பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கோட்டை பள்ளத்தை சேர்ந்த சிவதாஸ் ( வயது 40) என்பது தெரியவந்தது. இவர் எட்டிமடையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டாராம். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் கோவையில் உள்ள லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply