கோவை கார் வெடிப்பு: அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு – என்.ஐ.ஏ குற்ற பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நடந்த தற்கொலை தாக்குதலில் ஐ.இ.டி எனப்படும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது என்று என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தீய கொள்கைகளை ஜமேஷா முபின் ஏற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை உறுதியாக ஏற்றுக் கொண்டார். கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் என்பவரிடம் இருந்து ஒரு பெண் டிரைவ் கைப்பற்றப்பட்டது. அதில் ஜமேஷா முபின் தன்னை ஐ.எஸ் பயங்கரவாதி அமைப்பின் உறுப்பினர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வீடியோ காட்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி விலாவாரியாக ஜமேஷா முபின் பேசி உள்ளார். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்று உள்ளன. அதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற இலக்குகளும் அவற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளன. அரசு அலுவலக கட்டிடங்கள், மாவட்ட நீதிமன்றம், பூங்கா, ரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் ஒரு சில கோவில்கள் ஆகியவையும், வீட்டில் கைப்பற்றப்பட்ட கையெழுத்து பிரதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்ற தகவலும் வெளியானது.

கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த தற்கொலை படை தாக்குதலில் காரில் ஐ.இ.டி எனப்படும் அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது. முகமது அசாருதீன், முகமத் தல்கா, பெரோஸ், முகமத் ரியாஸ், நவாஸ், அப்சர் கான் ஆகியோர் எரிபொருள் கொண்டு செல்ல உதவி உள்ளனர். ஜமேஷா முபின் பயன்படுத்திய காரை தல்கா வழங்கி உள்ளார். பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் வெடிபொருட்களை காரில் ஏற்றி உள்ளனர் என ஆசாருதீன், அப்சர் ஆகியோர் வெடி மருந்து பொருட்களை தனித் தனியாக கொள்முதல் செய்து ஒன்றோடு ஒன்று கலக்கி பேக்கிங் செய்து வெடிகுண்டு தயாரிக்க உதவி உள்ளனர். இவ்வாறு அந்த குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆசாருதீன், தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நிவாஸ், அப்சர் கான் ஆகியோர் மீது வெவ்வேறு சட்டப் பிரிவுகளில் குற்ற சாட்டப்பட்டு உள்ளதாக என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.