கோவை குண்டு வெடிப்பு ஆயுள் தண்டனை கைதி சாவு..

கோவை உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்தவர் என். எஸ். ஹக்கீம். (வயது 46)இவர் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில தண்டனை அனுபவித்து வந்தார்..இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பரோலில் சிகிச்சை பெற்று வந்தார்..அவர் இன்று காலையில் மரணம் அடைந்தார்..அவரது உடல் நல்லடக்கம் இன்று (வியாழக்கிழமை) ஆத்துப்பாலம் சின்ன பள்ளிவாசல் கவரிஸ்தானில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெறும்..