சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி …

சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி …

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் கோவை ஏழாவது வீதி ரத்தினபுரி பகுதியில் குடிமகன்களுக்காக திறந்து வைத்த டாஸ்மார்க் பார் இந்த பார் காவல் நிலையம் அருகே உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் இரவு நேரங்களில் 24 மணி நேரமும் அதிக கட்டணத்தில் மதுபானம் கிடைப்பதாக மது பிரியர்கள் அங்கு வந்து வாங்கி செல்வதாகவும் இதனால் அங்கு அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் அருகே உள்ள வீடுகள், கடைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் இதுபோன்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் இந்த நாளில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தும் இதுபோன்று மது விற்பனை செய்வது அனைவரின் மனவேதனையை ஏற்படுத்துகிறது.
மேலும் அதில் ஒரு மது பிரியர் அங்கு சென்று விற்கப்படும் மதுவை வாங்கி உள்ளார். அந்த மதுபான பாட்டில் மூடி சரியாக மூடி சீல் வைக்கவில்லை என்றும் மதுவில் சரியாக போதை ஏறவில்லை என்றும் தகராறு செய்யும் சம்வத்தை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.