கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு

கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு

75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம  ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரிடம் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் அங்கு நடைபெற்ற கிராம கூட்டத்தில் மனுக்களை ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்து விட்டார்.

 

இதனால் அந்த மனுகளை திரும்ப பெற சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பெற்று கொண்ட அவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று அவர் அனுமதி அளித்த பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் கடிதம் மூலம் உறுதியளித்தார். இதனால் இந்த கிராம சபைக் கூட்டம் நடை பெறவில்லை.