சிகிச்சைக்கு வந்த இடத்தில் பெண்ணிடம் சில்மிஷம்- டீ மாஸ்டர் கைது..

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனை உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த வாலிபர் கேரளா பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். கூச்சல் இடுவதை பார்த்த அந்த வாலிபர் உடனடியாக தனது உடன் வந்த நண்பர்களுடன் வெளியே ஓடிச் சென்றுள்ளார். அவர்களை அங்குள்ள செக்யூரிட்டி தடுத்து நிறுத்தியும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் அந்தப் பெண் சூலூர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு வந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் பதிவான காட்சிகளைக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். அப்போது கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்த டீ மாஸ்டர் மகாலிங்கம் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் மகாலிங்கத்தை கைது செய்த காவல்துறையினர் விசாரணை வருகிறார். வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் பாதுகாப்புகள் செக்யூரிட்டிகள் என பலர் இருந்தும் பெண்ணுக்கு பாலியல் சீண்டல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.