கோவை இருகூர் மாசாணிஅம்மன் தலையில் அமர்ந்து பூஜை செய்த கிளி- பரவசத்தில் பக்தர்கள்..!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருகூரில் 100 ஆண்டுகள் பழமையான மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடம் வருடம் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்த நிலையில் இந்தாண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது.
வருட வருடம் அம்மனுக்கு ஆடி மாதம் சிறப்பு பூஜை நடைபெறும் பொழுது அம்மனின் மடியில், தலையில், கிளி வந்து அமர்வது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோன்று கோவிலில் சுற்றி திரியும் கிளி ஒன்று அம்மன் தலையில் அமர்ந்து பாடல்கள் இசைத்த போதும் பூஜை செய்த போதும் நகராமல் அம்மன் தலையிலேயே இருந்தது பூக்களை எடுத்து அம்மன் தலையில் போட்டு பூஜையும் செய்தது.
இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் மாசாணி அம்மனை வழிபட்டனர் இந்த செய்தி அருகில் உள்ள ஊர்களுக்கும் பரவியதால் பொதுமக்கள் அம்மனை தரிசிக்க குவிந்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் போது மாசாணி அம்மனுக்கு பூஜை செய்தபோதும் பெண்கள் குழுவாக பாடல் இசைத்த போதும் பம்பை மேளங்கள் முழங்கிய போதும் கிளி அம்மன் தலையில் இருந்து நகராமல் அப்படியே இருந்தது அம்மனே பாடல்களை கேட்டு ரசித்தது போல இருந்ததாக தெரிவித்தனர்.