பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த கோவைக்கு முதல்வர் வந்துள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி உரை

பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த கோவைக்கு முதல்வர் வந்துள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி உரை. 

கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐந்து முறை கோவைக்கு வருகை தந்து பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார் இன்று ஒரே அரங்கில் 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த இடத்திற்கு(கோவை) முதல்வர் வருகை தந்துள்ளார் எனவும் தெரிவித்தார். இந்த ஆட்சியில் மத வேறுபாடு இல்லை ஜாதி வேறுபாடு இல்லை கட்சி வேறுபாடு இல்லை என தெரிவித்த அவர் அனைவருக்கும் பயன்பெறும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் இதற்கு முன்னது வரை 1 லட்சத்து 32 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் சிலர் பிரச்சனையை தூண்டுவதாக தெரிவித்த அவர் ஆழியாறு தண்ணீர் பிரச்சனையை சிலர் அரசியலாக பார்ப்பதாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டு வளர்ச்சி என்று சொன்னார்கள் ஆனால் இன்னும் இங்கே மண் சாலைகள் உள்ளதாகவும் தெரிவித்தார். வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை மாநகர மன்றத்தின் கூட்டத்தின் அடிப்படையிலும் பொதுமக்களின் கருத்துக்கள் அடிப்படையிலும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.