கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் காரில் வந்துந கை பறிக்க முயன்ற 2 கொள்ளையர் கைது.தப்பி ஓடும்போது தவறி விழுந்து கை முறிந்தது..!

கோவை ஜி.வி. ரெசிடென்சி அருகே நடைப்பயிற்சி செய்த.கவுசல்யா( வயது 38 )என்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது..இது வீடியோவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது..இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க 3தனிப்படை அமைக்கப்பட்டது..இவர்கள்அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, இந்த கொள்ளை முயற்சி நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளை கும்பலை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் பீளமேடு,சித்ரா பக்கம் உள்ள அண்ணாநகர் முருகேசன் மகன் அபிஷேக்குமார் (வயது 25)தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி முருகன் மகன் சக்திவேல்(வயது 29)என்பது தெரிய வந்தது.இவர்கள் இருவரும் கடந்த 7ஆண்டுகளாக கோவை பீளமேடு,சித்ரா பகுதியில் வசித்து வருகிறார்கள். சக்திவேல் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டு வந்துள்ளார்.அபிஷேக்குமார் கோவையில் ஒரு நிறுவனத்தில் உணவு விநியோகஸ்தராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சக்திவேலுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் தனது நண்பரான அபிஷேக்குமாரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அபிஷேக் குமார் யாரிடமாவது நகையை பறித்து பண தேவையை பூர்த்தி செய்யலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் .இதை யடுத்து இருவரும் காரில் சென்று நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிக்க திட்டமிட்டனர். அடையாளம் தெரிந்து விடாமல் இருக்க காரின் நம்பர் பிளேட்டை கழட்டி வைத்துள்ளனர். கொள்ளைக்குப் பயன்படுத்தியது சக்திவேலின் கார் ஆகும. கார் பறிமுதல் செய்யப்பட்டது..முன்னதாக தனிப்படை போலீசார் அபிஷேக்குமார் சக்திவேல் ஆகியோரை பிடிக்க முயன்றபோது அவர்கள் இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினர். இதனால் போலீசார்அவர்களை துரத்திச் சென்றனர். அவர்கள் 2 பேரும் வேகமாக ஓடும்போது தவறி கீழே விழுந்தனர். இதில் அபிஷேக்குமாருக்கு இடது கையிலும், சக்திவேலுக்கு வலது கையிலும் எலும்பு முறிந்து காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.. அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில் கை எலும்பு முறிந்தது உறுதியானது .அதை தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கொள்ளை முயற்சி நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை முயற்சி நடத்திய கும்பலை துரிதமாக பிடித்து சாதனை படைத்த மாநகர காவல் துறையினரை பொதுமக்களும், பல்வேறு சமூக சேவை அமைப்புகளும் பெரிதும் பாராட்டினார்கள்..