சூலூரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம்.நேற்று  மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அருகில் இருந்து ...

கோவை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தீவிரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்ததாக பல்வேறு புகார்கள் அந்த அமைப்பின் மீது எழுந்தது. இது, தொடர்பாக கடந்த மாதம்  தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பலர் ...

பெய்ஜிங்: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. ‘சர்வாதிகாரியை அகற்று’ என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் நிலையில் இதுவரை 14 லட்சம் கைது செய்யப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு எதிராக அசாதாரண ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் பல இடங்களில் ...

சேலம்: தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 50ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டுள்ளது. இதனை தொடர்ந்து 4 வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசில்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து ...

கோவை துடியலூர் அருகே உள்ள என் .ஜி.ஜி. ஓ காலனி, அமராவதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள்  கீர்த்திகா( வயது 18) கோவையில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி துடியலூர் போலீசில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் உள்ள 12-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாலை ஒன்று இருந்தது. ஆனால் அந்த சாலை கடந்த சில மாதங்களாகவே பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டதோடு, பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள நெகமம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் ஷட்டர் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும். இது குறித்து கோலப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜ் நெகமம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சுற்றுவட்டார 40 கிராமங்களில் அகில உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு சமூகத்தில் சம அந்தஸ்து ,சம அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்தல், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகள் இல்லாத சமூக நிரந்தர தீர்வு காணுதல், குழந்தைகள் திருமணத்தை ...

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடப்பட்டியில் (லேட்) செல்லன் மனைவி ராமுத்தாய் என்பவர் வசித்து வருகிறார் இவர் கணவர் இறந்த பிறகு தனது வாழ்க்கைக்கு ஆதாரமாக சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு மாடுகள் வளர்த்து அதில் வரும் வருவாயை வைத்து ஜீவனம் செய்து வருகிறார் அதனைத் தொடர்ந்து இரவு ...

கோவை: தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், தொலைதூர கிராமத்தில் உள்ளவா்கள் பயனடைந்து வருகின்றனா். குறிப்பாக கா்ப்பணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை பெரிதும் உதவியாக உள்ளது. கா்ப்பிணிகளை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் செல்லும்போது, ஒரு சிலருக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறக்கும் சூழல் நேரிடுகிறது. ...