விளையாட சென்ற 3 சிறுவர்கள் சூலூர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்..

சூலூரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம்.நேற்று  மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அருகில் இருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பார்த்துள்ளார் உடனடியாக அந்த இடத்திற்கு செல்வதற்கு உள்ளாகவே மூவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். இது குறித்து உடனடியாக
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூவரது உடலையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடற்கூறாய்வுக்காக சிறுவர்களின் ஊடல்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.