நவ.,12ம் தேதி இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு..!

மாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று (அக்.14) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறினார். வேட்புமனு தாக்கல் வரும் 17ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி முடிவடையும் என்று தெரிவித்தார்.

வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ராஜீவ் குமார் குறிப்பிட்டார். குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.