கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது தியாகி குமரன் அனைத்து காய் கனி சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நழிவற்ற வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தருமாறு மாநகராட்சியிடம் கேட்டிருந்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 88 ...
சென்னை பள்ளிக்கரணையில் பாலத்தின் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக ...
குடத்திற்குள் தலையை விட்டு சிக்கி தவித்த நாய்:கோவையில் தீயணைப்பு துறையினர் மீட்டனர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து பாலமலை செல்லும் ரோட்டில் திருமாலூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நாய் வீட்டில் அங்குமிங்கும் விளையாடி கொண்டிருந்தது. திடீரென ...
கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பதாங்காலி மாவட்டம். இங்கு உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியான ...
கோவை செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலியை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். வேலூர் பக்கம் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர் 15 வயது இளம் பெண் இவர்கள் இருவரும் சின்னக்குயிலியில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த 14ஆம் தேதி இருவரும் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து ...
ஊட்டி: கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு செய்து, 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர். இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் ...
கோவை காருண்யா பல்கலைகழக வளாகத்திற்குள் காட்டு பன்றிகள் இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்த போது, அடுத்தடுத்து 4 காட்டு பன்றிகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த காட்டு பன்றிகள் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ...
கோவை: தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகை குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக அமைப்பானது, தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு ...
கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான இந்த பகுதிக்கு உள்ளூர் வாசிகளும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். இதனிடையே மாண்டஸ் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது. கோவை மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ...
மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பாரதி நகரை சேர்ந்தவர் செட்டியப்பன் (வயது 52). இவரது மனைவி ராதா (48). இவர் ஆடுகளை சொந்தமாக வைத்து மேய்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பவித்ராவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ...













