கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்கொலை தாக்குதல் என காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் ...

துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் ...

அதிபயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா சார்பில் முதல் கட்ட நிவாரணப் உதவி இன்று விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. துருக்கியின் தென் மத்திய பகுதியில் திங்கட்கிழமை அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் ...

அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை ...

கோவை ஆர். எஸ். புரம் கிழக்கு ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மருதாச்சலம் ( வயது 94 ) இவர் நேற்று ,டி.பி .ரோடு- ராமலிங்கம் ரோடு சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு கார் இவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் மருதாச்சலம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...

கோவை அருகே உள்ள சூலூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன் ( வயது 26) இவரது மனைவி பிரியா ( வயது 25) இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 4 )என்ற மகள் உள்ளார் .இவர்கள் நடுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார்மில்லில் வேலை செய்து வருகிறார்கள்..இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பிரியா தனது மகள் ஸ்ரீமதியுடன் எங்கோ ...

கோவை அருகே உள்ள சூலூர், கலங்கல் கங்கா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகள் சவுந்தர்யா (வயது 19) அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .கடந்த 2-ந்தேதி இவர் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவர் தாயார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா தனது ...

கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் சலீம் .இவரது மகன் முகமது ஹனீபா(வயது 29) காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.இவர் கடந்த 6 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு இவர் அடிமையாகி இருந்தார்.இதை இவரது தந்தை கண்டித்தார்.இதனால் முகமது ஹனீபா வீட்டிலிருந்து திடீரென்று மாயமானார். இந்த நிலையில் நேற்று வாலாங் குளத்தில் இவர் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை ...

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்களின் உணர்வுகளை, அவர்களுக்கான வாழ்க்கை முறைகளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர். மூன்றாம் பாலினத்தவரை மரியாதை குறைவாக நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து கொண்டுதான், இருக்கிறது. இந்திய சட்டப்படி அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கு இருந்தாலும், அதை பெறுவதில் அவர்களின் போராட்டம் “காணல் நீராகவே” இருக்கிறது. மூன்றாம் ...