சென்னை/ தாம்பரம்: தமிழகத்தில் பிஹார் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பது வேதனை தருவதாக, சென்னை வந்த லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்தார். போலி வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில், அவர்களது நிலை ...

மேற்குவங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 19 குழந்தைகள் பலியானதை அடுத்து அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் அதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகள் குவிந்து வருகிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ...

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் ‘நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’ பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில் உலகம் முழுவதும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று அனைத்து மாவட்ட ...

கோவை அருகே உள்ள பேரூர் படித்துறை பகுதியில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் பாலக்காட்டை சேர்ந்த 55 மதித்தக்க ஒருவர் இன்று காலையில் பேரூர் படித்துறையில் திதி கொடுத்துக் கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பால் காலபைரவர் சன்னிதியில் மயங்கி விழுந்து இறந்தார். பேரூர் கோவிலில் பக்தர் உயிரிழந்ததன் காரணத்தால் கோவில் நடை இன்று ...

கோவை சரவணம்பட்டி கஸ்தூரிபாய் சூப்பர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது வெசிட் (வயது 23) இவரது மனைவி மஞ்சுளா( வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர் .கடந்த 4-ந் தேதி மஞ்சுளா கொடைக்கானலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பெற்றோர் வீட்டுக்கு ...

கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட் கிரைண்டர், பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 2 ...

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மானார் சரக பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் யானைக்கு சுமார் 8 முதல் 10 வயது இருக்கும்.யானையின் உடலில் மேற்பகுதியில் எந்த காயமும் இல்லை.இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்க ...

புதுடெல்லி: தங்க நகை விற்பனை சார்ந்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும். தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய ...

கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏசியாநெட் செய்தி நிறுவனம், கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கம் ஊடுருவி இருப்பது தொடர்பாக செய்தி வெளியிட்டது. அதில், 9 வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவன் தனக்கு போதை மருந்து தந்ததாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ...