கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் நாரணாபுரம்,சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் சைமன்,இவரது மகன் சிந்துராஜ் (வயது 31) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பணக்கஷ்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து  நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி ...

கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65) இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை மத்திய சிறையில் வார்டனாக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நீரழிவு, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 9-ந்தேதி விஷம் குடித்தார்.இவரை கோவை ...

ஒடிசா, வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற கிழக்கு கடற்கரை மாநிலங்களில் அடுத்த மூன்று-நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலால் தூண்டப்பட்ட கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு மாறாக, ஒடிசா, வங்காளம், பீகார், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ...

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர் வென்ஸ்டிசோசா (வயது 31)இவரது கடையில் அரவிந்த் என்பவர் தனது பி.எம். டபுள்யூ சொகுசு காரை பழுதுபார்க்க கொடுத்திருந்தார். காரை பழுது பார்த்த நிலையில் அரவிந்த் காரை எடுத்து சோதனை செய்துவிட்டு ஒர்க்ஷாப் அருகே நிறுத்திவிட்டு உரிமையாளர் வென்ஸ்டி சோசாவிடம் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 48 ) விவசாயி. இவர் நேற்று பொள்ளாச்சி தொப்பம்பட்டியை சேர்ந்த பசுபதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடுமலை -பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பசுபதி ஓட்டினார்.கோமங்கலம் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த வேன் மீது ...

பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வுக்காக நாடு முழுவதும் தன்னார்வலர் கார் பயணம். நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த மணி நேரத்தில் கடந்ததால் அதனை அங்கிகரித்து World Record Union , Asia Book of Record , India Book of Record அங்கிகரித்து விருது வழங்கி கெளரவிப்பு திரட்டப்பட்ட நிதி 6 லட்சம் ரூபாய்கான ...

கோவையில் முதல் முறையாக நாய் மற்றும் செல்லப் பிராணிகள் இறந்தால் அதனை பாதுகாப்பான முறையில் எரியூட்ட, தகன மையம் சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், போலீஸ் கமிஷனர் ...

புதுடில்லி : ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐந்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையம் அருகே ஜூன் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 288 பேர் உயிரிழந்தனர். ...

டெல்லியில் பைக் டாக்சிகள் இயங்க இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. விதிமுறைகளை மீறி செயல்படுவதாக கூறி பைக் டாக்சிகள் இயங்க மே 5ஆம் தேதி டெல்லி அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய ...

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த பிபர்ஜாய் புயலானது குஜராத் மாநிலம் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே ஜூன் 15ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை ...