கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கி காப்பீட்டு திட்ட பயனாளிக்கு இறப்புக்குப் பின்பு இரண்டு லட்சம் வழங்கப்பட்டது இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும், குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மத்திய அரசு ஜீவன் ஜோதி ...
தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் பிரச்னையாக மாறியுள்ளது. சம்பா சாகுபடிக்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, ...
நாளை செப்டம்பர் 24ம் தேதி சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளன. இதிஹ்ல் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுவடவள்ளி அட்டமொக்கை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி ( 70). மாற்றுத் திறனாளி விவசாயியான ராமசாமியின் விவசாயத் தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் இவரது தோட்டத்திற்கு நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் அதிகாலை ...
புதுடெல்லி: வரும் தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சரவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கான தடை நீட்டிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என்றும், எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, ...
சென்னை: நிலவின் தென்துருவத்தில் கடும் குளிரில் செயல்பாட்டை நிறுத்திய சந்திரயான் -3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். நேற்று விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் கிடைக்காத நிலையில் இன்று மிக முக்கிய நாளாகும். இந்தியா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு ...
சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்துள்ளது. இந்த கப்பல் கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் வரை 3 ஆய்வாளர்களை ஏற்றுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ், ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் , திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை அவர்களின் தலைமை மற்றும் மேற்பார்வையிலும், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட சர்வோமா மற்றும் அசைவ உணவுகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் ...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கருங்குடி ஊராட்சி பால்குளம், ஊரவயல், கருங்குடி, வளமாவூர், மாவிலிங்கை ஏந்தல் ஆகிய 5 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுடைய வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயத்தை நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் நாரை பறக்க முடியாத 48 மடை கொண்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இருந்து பால்குளம் ...
மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயலட்சுமி மதுரை ரெயில்வேயில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு பவித்ரா ...













