ஆழ்கடல் ரகசியங்களை வெளிப்படுத்தும் நீர்மூழ்கி கப்பல்.!!

சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்துள்ளது.

இந்த கப்பல் கடல் மட்டத்தின் கீழ் 6000 மீட்டர் வரை 3 ஆய்வாளர்களை ஏற்றுச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ், ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து தொழில்நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

இந்த நீர்மூழ்கி கப்பல் 2.1 மீட்டர் விட்டம் 22 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட 600 பார் அழுத்தத்தை தாங்க கூடிய டைட்டானியம், அலாய் மூலம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வு பணியாக இருக்கும். இதனால் கடல் வாழ்விடம் மற்றும் கடல் வாழ் உயிரினத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பை உயர்த்துவதற்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..