சென்னை : தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக ‘டாஸ்மாக்’ கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், ...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி ரவிச்சந்திரன் முருகன் சாந்தன் ராபர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது . இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் சாந்தன் அடைக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதியிடம் தாம் மீண்டும் இலங்கை நாட்டிற்கு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் பிரனேஸ் (வயது 13) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான் .குடியரசு தின விழா விடுமுறையையொட்டி நேற்று அங்குள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து அவரது தந்தை பிரவீன் குமார் ...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதை எதிர்த்து ஏகனாபுரம் மக்கள் 5-வது முறையாக கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கும் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தால், 2-வது சர்வதேச புதிய ...

கோவை: தமிழகத்தில் மீண்டும் ‘எம் சாண்ட்’, ‘பி சாண்ட்’ உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடுகளுக்கான கட்டுமான செலவு 10 முதல் 15 சதவீதம் உயரும் என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு கட்டுமானம் மற்றும் ...

இந்திய கடற்படை உள்நாட்டிலேயே தயாரித்த சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனையை இந்திய கடற்படை நடத்தியது. இது தொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளரின் அதிகாரபூர்வ ‘X’ பக்கத்தில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய கடற்படை மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து ...

கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். ...

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, எம்பிக்கள் இருந்த பகுதிக்குள் குதித்த 2 நபர்கள் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 59) இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. ...

கடந்த 2022 ஆம் ஆண்டு ஸ்டார்லிங் செயற்கை கோள் சேவைகள் (GMPCS) பெற விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் இத்தகைய உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங் பெறும். ஏற்கனவே இந்தியவில் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சேட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான ...