திருச்சி மாநகா் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் சாலையோரத்தில் பூ, பழம், காய்கறி உள்ளிட்டவற்றை வைத்து விற்ற தள்ளுவண்டிகளை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் ஆக்கிரமிப்புகள் எனக் கூறி அகற்றினா். இதேபோல திருச்சி தெப்பக்குளம், மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மாநகராட்சி, நெடுஞ்சாலை ...
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி இன்று மீண்டும் தொடங்குகிறது. அங்கே பதற்றமான சூழ்நிலை இதனால் நிலவுகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் ...
தங்கம் விலை நேற்று புதிய உச்சமாக கிராம் ஒன்றுக்கு ரூ.6,000யைக் கடந்து விற்பனை செய்யபப்ட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்னயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாததொடக்கம் முதலே புதிய உச்சம் தொட்டு வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் நேற்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு ...
மின்னணு கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறையை உருவாக்கியுள்ளனர். 1டாலர் சிலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கத்தை பெறலாம் என்றும் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் புரதக் கடற்பாசிகள், சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள், மின் கழிவுகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கத்தை மீட்க பயன்படுத்தியுள்ளனர். இந்த முறை நிலையானது மற்றும் வணிக ரீதியாக சாத்தியமானது ...
மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ‘யக்க்ஷா’ கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக ...
‘மெக் லைஃப் சயின்சஸ்’ நிறுவனத்தின் மாத்திரைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களை, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த மாத்திரைகள் போலியானவை எனத் தெரிவித்துள்ள ஆணையம், சுண்ணாம்புத் தூள் மற்றும் கஞ்சியில் தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ஆபத்தானது எனக் கூறியுள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை ஏற்கெனவே யாரேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...
வால்பாறை நகரம் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களைகோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் வழங்கி சிறப்பித்தார்.தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பற்றி ...
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ ...
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பணம் கேட்ட மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக ...
சென்னை: தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் நேற்று நடந்த முகாமில், 5 வயதுக்கு உட்பட்ட 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்தியாவில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. ...













