வால்பாறையில் நடைபெற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டி

வால்பாறை நகரம் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களைகோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் வழங்கி சிறப்பித்தார்.தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பற்றி மழலைச் செல்வங்கள் பேசிய பேச்சுக்களை வாழ்த்தியும் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார். நிகழ்வில் வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி சுதாகர்,நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் J.பாஸ்கர் மற்றும் வால்பாறை நகர கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.