கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வில்லோனி எஸ்டேட் அருகே உள்ள நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதி சேர்ந்த ரவி என்பவரை எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கி கடந்த 8 ஆம் தேதியன்று உயிர் இழந்ததை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி துணை இயக்குநர், (கூடுதல் பொறுப்பு) ...

மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம் செய்ய டிராக்டர் வழங்குகினார். ஊர் மக்கள் அவருக்கு மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு எம்.ஜி.ஆர் அன கோஷமிட்டனர். அப்போது பேசிய அவர், நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கு சேவை எண்ணம் தோன்றினால் போதும் ...

கோவை காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் கருப்புசாமி (வயது 25) தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பஸ் ஓட்டிச் சென்றார். அன்று இரவு 9:30 மணி அளவில் அவர் பேரூர் சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் ...

கோவை மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட உள்ளது .இதற்காக எம்ஜிஆர் மார்க்கெட் அருகே இருந்த 4 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு மற்றும் ...

கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கி உள்ளது. இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மாலை ...

புதுடெல்லி: உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் எம்பர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ல் சூரிய சக்தி உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2023-ல் இந்தியா சூரிய ஒளி சக்தி உற்பத்தியில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் 4-வது இடத்தில் இருந்த ஜப்பானை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. ...

சென்னை: சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34; அசோக்குமார்,34, சதானந்தம், 45 ஆகியோரும் கைதாகி, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில், ஐந்து பேர் மீதும், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், மத்திய போதை பொருள் ...

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக IIFL இல் நிதி முறைகேடு ...

கேரளாவில் பரவும் புதுவித வெஸ்ட் நைல் காய்ச்சல்: ஒருவர் பலி – நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை !!! வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோய்கள் ஏற்படலாம். நோய் தீவிரமடையும் வரை அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது. மனிதர்களில் இந்தத் தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதனால் ஏற்படுகிறது. கேரளாவின் ...

சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி போரூர் திருநின்றவூர் பட்டாபிராம் ஆவடி அம்பத்தூர் கொரட்டூர் திருமுல்லைவாயில் செங்குன்றம் மாதவரம் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் குற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் ஆவடி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் ...